வியாழன், 19 செப்டம்பர், 2013

வவுனியாவில் இரு நாட்கள்.....

யாழ் ஐரி ஹப் னூடாக ஒழுங்கு செய்யப்பட்ட பள்ளிக்கூட ரீச்சர்மார்களுக்கான ஒரு பயிற்சிப்பட்டறைக்கு நானும் ஒரு வளவாளனாக பங்கு கொண்டிருந்தேன். அந்த தருணத்தில் எனக்கு கிடைத்த இனிப்பான , கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆசைபடுகின்றேன்.

13.09.2013 அன்று இரவு 10.30 க்கு ரயில் . நானும் எனது ரூம் மெற்றும் 10.00 மணிக்கே ரயில்வே ஸ்ரேசனுக்கு போய் விட்டோம். அங்கே எம்மை எதிர்ப்பார்த்தபடி துஷி அண்ணா... வவுனியாவை அடுத்தநாள் காலம 5.30 மணிக்கு போய் சேந்திட்டம். அங்க வலய கல்வி திணைக்கள குவாட்டஷ் ல தங்கினம். சகிக்க முடியாத இடமா இருந்தாலும் மனத தேற்றிக்கொண்டு காலம கடமைகள் எல்லாம் முடிச்சிட்டு சரியா 7.45 மணிக்கு வவுனியா சிஆர்சி க்கு போயிட்டம். 8.30 ஆச்சு . கரண்டையும் காணேல, ரீச்சர் மார்களையும் காணேல.. சரி என்டு இருந்தா தமிழ்அழகன் சேர் வந்து " இங்க கரண்ட் இல்லாத படியா நாங்க வேற ஒரு பள்ளிக்கூடத்தில ஒழுங்கு செய்திருக்கிறம்" எண்டார். அப்பதான் ஒரு சந்தோசம் வந்திச்சு..



புதன், 18 செப்டம்பர், 2013

PhoneGap ஐ பாவித்து Android அப்பிளிக்கேசன்

phoneGap என்பது ஒரு framework. html, css மற்றும் javascript போன்றவற்றை பாவித்து Mobile application களை உருவாக்க பயன்படுகின்றது. HTML5 ஐ பயன்படுத்தி செய்கின்ற இணைய பக்கங்களையோ அல்லது game களையோ mobile apps ஆக மாற்ற இந்த phoneGap பயன்படுகின்றது.