வியாழன், 19 செப்டம்பர், 2013

வவுனியாவில் இரு நாட்கள்.....

யாழ் ஐரி ஹப் னூடாக ஒழுங்கு செய்யப்பட்ட பள்ளிக்கூட ரீச்சர்மார்களுக்கான ஒரு பயிற்சிப்பட்டறைக்கு நானும் ஒரு வளவாளனாக பங்கு கொண்டிருந்தேன். அந்த தருணத்தில் எனக்கு கிடைத்த இனிப்பான , கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆசைபடுகின்றேன்.

13.09.2013 அன்று இரவு 10.30 க்கு ரயில் . நானும் எனது ரூம் மெற்றும் 10.00 மணிக்கே ரயில்வே ஸ்ரேசனுக்கு போய் விட்டோம். அங்கே எம்மை எதிர்ப்பார்த்தபடி துஷி அண்ணா... வவுனியாவை அடுத்தநாள் காலம 5.30 மணிக்கு போய் சேந்திட்டம். அங்க வலய கல்வி திணைக்கள குவாட்டஷ் ல தங்கினம். சகிக்க முடியாத இடமா இருந்தாலும் மனத தேற்றிக்கொண்டு காலம கடமைகள் எல்லாம் முடிச்சிட்டு சரியா 7.45 மணிக்கு வவுனியா சிஆர்சி க்கு போயிட்டம். 8.30 ஆச்சு . கரண்டையும் காணேல, ரீச்சர் மார்களையும் காணேல.. சரி என்டு இருந்தா தமிழ்அழகன் சேர் வந்து " இங்க கரண்ட் இல்லாத படியா நாங்க வேற ஒரு பள்ளிக்கூடத்தில ஒழுங்கு செய்திருக்கிறம்" எண்டார். அப்பதான் ஒரு சந்தோசம் வந்திச்சு..



புதன், 18 செப்டம்பர், 2013

PhoneGap ஐ பாவித்து Android அப்பிளிக்கேசன்

phoneGap என்பது ஒரு framework. html, css மற்றும் javascript போன்றவற்றை பாவித்து Mobile application களை உருவாக்க பயன்படுகின்றது. HTML5 ஐ பயன்படுத்தி செய்கின்ற இணைய பக்கங்களையோ அல்லது game களையோ mobile apps ஆக மாற்ற இந்த phoneGap பயன்படுகின்றது.

செவ்வாய், 16 அக்டோபர், 2012

தமிழ்ல என்ர முதல் போஸ்ட்

புளொக் எழுது புளொக் எழுது தம்பி எண்டு என்னில அக்கறை வைச்ச வாத்திமார் என்னை போட்டு அரியண்டப்படுத்தி கொண்டு இருந்த காலத்தில நான் இத என்ன மண்ணாங்க்கட்டிக்கு எண்டு விட்டுட்டு பொம்புளப்பிள்ளைகள சயிட் அடிச்சுக்கொண்டு திரிஞ்சன். இப்ப என்னடா எண்டா என்ர குடும்பத்த பற்றி யோசிச்சுக்கொண்டு இருக்கக்குள்ள ஒரு மொக் இன்ரேவியூ எண்டு சொல்லி கொழும்புக்கு ஒரு சொவ்வெயார் கொம்பனிக்கு வரசொல்லி என்ர கூட்டாலிகளோட போனன். அங்க என்னடா எண்டா எக்கச்சக்கமான விசயங்கள சொன்னாங்க. அதோட இந்த புளொக், லிங்ட் இன் எண்டு கொஞ்சம் இருக்கு பாருங்கோ. அதுகள கொஞ்சம் எம்ரி யா வையாதேங்கோ எண்டாங்கள். அப்ப பாருங்கோ எனக்கு அவ்வளவு இங்கிலிசும் தெரியாது. அப்ப நான் என்ன மண்ணாவது தமிழ்ல எழுதி தொல்லைப்பம் எண்டு இந்த புளொக் கை தொடங்கினான்.

அது மட்டுமில்லை பாருங்கோ. இந்த யாழ் ஐரி ஹப் எண்டு ஒரு நிறுவனத்தில கொஞ்ச பேர் இருக்கிறாங்கள். அவங்களும் இப்புடி ஆளுக்கு மாறி ஆள் இப்படி எழுதுறத்தில பேய்க்காய்கள். அவங்களையும் ஃபலோ பண்ணிப்பாப்பம் எண்டு வெளிக்கிட்டதின்ர வெளிப்பாடு தான் இது.

கொஞ்சம் பொறுத்திருங்க. நிறைய சுவாரசியங்கள், நான் பட்ட வேதனைகள், அவமானங்கள், குட்டிக் குட்டிக் கதைகள் , என்ர நண்பர்களை பற்றி  எல்லாம் எழுதிறன்.

சீ யூ